ஆபாச படமே மேல்.. Dude படத்தை விளாசிய பேரரசு - ஏன் தெரியுமா?
கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தைவிட ஆபாசப் படம் எவ்வளவோ மேல் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
Dude
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஸ்னா சாவேரி, சாய் தீனா, தீபா, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்,
"ஜாதி படம், ஆக்ஷன் படம், எமோஷனல் படம், த்ரில்லர் படம் என எந்தவகை படமாக வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அதன் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் கலைக்கு செய்யும் சேவை. நோக்கம் சரியாக இல்லையென்றால் கலைக்கு செய்யும் துரோகம்.
பேரரசு விமர்சனம்
இப்போது என்ன மாதிரியெல்லாமோ படத்தை எடுக்கிறார்கள். இதற்கு நீங்கள் பேசாமல் ஆபாச படத்தை எடுத்துவிடலாம். அப்படி சொல்லிவிட்டு எடுத்தால் அதை பிடித்தவர்கள் சென்று பார்ப்பார்கள்.

ஆனால் நல்ல படம் எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். போய் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது” என மறைமுகமாக டியூட் படத்தை சாடியுள்ளார்.
டியூட் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாயை அள்ளியது. பிரதீப் இந்த மைல்கல்லை தொடுவது வரிசையாக மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.