சினிமாவில் இருந்து விலகும் ரஜினி? இதுதான் கடைசிப் படமாம்..!
ரஜினி சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ரஜினி
உச்ச நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே இளைய தலைமுறைய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். பின் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு ஜாலியான கலகலப்பான குடும்ப காமெடி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார்.
சினிமாவில் விலகல்
அதனைத் தொடர்ந்துநெல்சன் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தோடு ரஜினி சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர்.சி படம் 2026 தீபாவளியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சன் படம் 2027ல் தொடங்கப்படவுள்ளது. அதன்படி76வது வயதில் ரஜினி சினிமாவிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.