Saturday, Jun 28, 2025

உங்க படுக்கையறையில் நடந்திருந்தா.. விராட் ரூம் வீடியோ - எகிறிய மனைவி!

Virat Kohli Cricket Viral Video Bollywood
By Sumathi 3 years ago
Report

விராட் கோலியின் ஹோட்டல் ரூமை வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகரை அனுஷ்கா சர்மா திட்டியுள்ளார்.

விராட் கோலி

டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்காஉடன் மோதியது. இது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

உங்க படுக்கையறையில் நடந்திருந்தா.. விராட் ரூம் வீடியோ - எகிறிய மனைவி! | Anushka Furious After Virat Kohli Hotel Room Video

இந்நிலையில், விராட் கோலியில் அறையில் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து அவரின் ரூமை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது கோலியின் கவனத்திற்கு வந்தது. இதனால் கோபமடைந்த கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனுஷ்கா சாடல்

அதனைத் தொடர்ந்து, விராட் கோலியில் மனைவி அனுஷ்கா சர்மாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால், இது மிகவும் மோசமானது.

இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால்.. இதற்கான எல்லைக்கோடு எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.