ப்ளீஸ்...என்னுடைய Privacy-க்கு மதிப்பு கொடுங்கள் - ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்

Virat Kohli Viral Video
By Nandhini Oct 31, 2022 10:10 AM GMT
Report

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

சமீபத்தில் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி வேண்டுகோள்

இந்நிலையில், விராட் கோலி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் ரசிகர் ஒருவர் நுழைந்து பெட்ரூமை வீடியோவாக எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைப் பார்த்து கோபமடைந்த விராட் கோலி இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் -

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகமடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது.

எனது சொந்த ஹோட்டல் அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? இந்த வகையான வெறித்தனம் மற்றும் தனியுரிமையின் முழுமையான ஆக்கிரமிப்புடன் நான் சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.