சிறைக்கு சென்ற பிரபல இயக்குனர்..வாழ்வை மாற்றிய அந்த நபர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Viral Video Anurag Kashyap
By Swetha Jul 01, 2024 11:56 AM GMT
Report

தான் சிறைக்கு சென்று வந்த அனுபவத்தை பிரபல இயக்குனர் பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குனர்

அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அவர் அசத்தி வருகிறார். தமிழில் அவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

சிறைக்கு சென்ற பிரபல இயக்குனர்..வாழ்வை மாற்றிய அந்த நபர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Anurag Kashyap Shares His Jail Story

அதன்மூலம் அவரது நடிப்பை திரையுலகத்தினரும், ரசிகர்களும் கண்டுகொண்டனர். அதனையடுத்து அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உங்கள் மாதவிடாய் தேதி என்ன? நடிகையிடம் பகிரங்கமாக கேட்ட இயக்குனர் !

உங்கள் மாதவிடாய் தேதி என்ன? நடிகையிடம் பகிரங்கமாக கேட்ட இயக்குனர் !

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், "நான் சிறையில் இருந்திருக்கிறேன். ஒருவரை அடித்துவிட்டேன். அதனால் நான் ஜெயிலுக்கு சென்றேன். நான் தவறான ஆள் மேலே கையை வெச்சிட்டேன்.

சிறைக்கு சென்ற பிரபல இயக்குனர்..வாழ்வை மாற்றிய அந்த நபர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Anurag Kashyap Shares His Jail Story

ஒருநாள் இரவு முழுக்க ஜெயிலில் இருந்தேன். யாரை அடித்து நான் ஜெயிலுக்கு போனேனோ அவரேதான் என்னுடைய வாழ்க்கை மாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர்தான் என்னை ஜெயிலில் இருந்து வெளியேயும் கொண்டுவந்தார்" என்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அட இப்படியும் நடந்திருக்கா; என்ன நடந்திருக்கும் யாரை அனுராக் அடித்திருப்பார் என்று கேள்வி மேல் கேள்வி சமூக வலைதளங்களில் கேட்டுவருகின்றனர்.