உங்கள் மாதவிடாய் தேதி என்ன? நடிகையிடம் பகிரங்கமாக கேட்ட இயக்குனர் !
ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2 படத்தில் நடிக்கும்போது அனுராக் காஷ்யப் என்னிடம் மாதவிடாய் தேதி குறித்து கேட்டார் என நடிகை அம்ருதா சுபாஷ் தெரிவித்துள்ளார்.
அனுராக் காஷ்யப்
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் இதுவரை 23 படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் வலம்வருகிறர். இவர் தமிழில் அதர்வா நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இதனால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
மாதவிடாய் தேதி குறித்து கேட்டார்
இந்நிலையில் ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2 என்ற படத்தில் நடிகை அம்ருதா சுபாஷூடன் நடித்திருந்தார் .அப்போது நடிகையிடம் அவரின் மாதவிடாய் தேதியைப் பற்றி கேட்டதாக தெரிவித்தார். இதைப்பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய அம்ருதா சுபாஷ் "அனுராக் காஷ்யப்புடன் ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2-ல் நான் நடித்திருந்தேன்,
ஆண், பெண் பேதங்கள் இல்லாமல் இந்த படத்தில் அவருடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தேன். அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அதனால் நெருக்கமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து அவர்தான் என்னிடம் கேட்டறிந்தார். அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
