இது கல்யாணம் இல்லை - சர்க்கஸ் நிகழ்ச்சி !! அம்பானி திருமணத்தை கழுவி ஊற்றிய ஆலியா
தொழிலதிபர் அம்பானி மகனின் திருமணம் தான் இந்தியாவின் கவனத்தை தற்போது பெற்றுள்ளது.
திருமணம்
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நாளை மும்பை Jio world center'இல் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஜாம்நகரில் ஜாம் ஜாம் என ஒரு கொண்டாட்டம்.
அதனை தொடர்ந்து ஐரோப்பா நாட்டில் கோலாகலமாக கப்பலில் ஒரு கொண்டாட்டம் என கொண்டாடி தீர்த்தார்கள். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென ஜியோ recharge விலைகள் அதிகரித்து விட்டது. செலவு சற்று கையை கடித்து விட்டது போல.
இல்ல கல்யாணத்துக்கு நாமளும் மொய் வைக்கணும்'னு என யோசித்தரோ என்னவோ அம்பானி? சரி அதெல்லாம் இருக்கட்டும், இவர்கள் பணத்தை கொட்டி நட்சத்திரங்களை வரவழைத்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வை பிரபலம் ஒருவர் சர்க்கஸ் கூத்து என நேரடியாகவே தாக்கி விட்டார்.
இது சர்க்கஸ்
அவர், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மகளான ஆலியா. இது குறித்து அவர் பேசும் போது, அம்பானி திருமணத்தை "ஒரு சர்க்கஸ்" மற்றும் "பெரிய PR உத்தி" என்று குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் சேனலில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். ஆலியா, "அம்பானி திருமணம் ஒரு திருமணம் அல்ல, இந்த நேரத்தில், இது ஒரு சர்க்கஸ் ஆகிவிட்டது.
இருப்பினும் நான் எல்லாவற்றையும் பின்தொடர்ந்து மகிழ்கிறேன்."
திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வந்தபோதிலும் அதனை ஆலியா நிராகரித்திருக்கிறார். "நான் சில நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டேன், அவர்கள் PR செய்கிறார்கள். ஆனால் ஒருவரின் திருமணத்திற்காக என்னை விற்பதை விட எனக்கு கொஞ்சம் சுயமரியாதை இருப்பதாக நான் நம்ப விரும்புகிறேன், அதனால் நான் வேண்டாம் என்று சொன்னேன் என கூறுகிறார் ஆலியா.