குக்கர் மாதிரி அவர் முகமும் இருக்கு..அப்புறம் என்ன? டிடிவி தினகரன் மனைவி கலகல!
டிடிவி தினகரனுக்காக அவர் மனைவி அனுராதா, தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
டிடிவி தினகரன் மனைவி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் களம் சற்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில், தேனீ தொகுதி பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா முதன்முறையாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பேசிய அவர், "குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள், சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மற்றவருக்கும் எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் நின்றதால் இதை சொல்கிறேன்.
குக்கர் மாதிரி அவர் முகம்
அவர் அரசியல் பாதை தொடங்கியது தேனி தொகுதியில். இந்த தொகுதிக்காக நீங்கள் எதையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி செய்தாரோ அதே போல இப்போதும் செய்வார். அவர் என்னோடும், மகளோடும் இருந்ததைவிட உங்களோடு இருந்ததுதான் அதிகம்.
ஆர்.கே.நகரில் கிடைத்தது இந்த குக்கர் சின்னம், ஆர்.கே.நகரில் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தார்கள். அதேபோல இந்த தேனி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் குக்கர் போன்றது.
தினசரி பால், சாப்பாடு வைப்போம், அந்த குக்கர் மாதிரி தானே அவர் முகமும் குண்டா இருக்கு. அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும். குக்கர்னா டிடிவி, டிடிவினா குக்கர். குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு" என்று கலகலப்பாக வாக்கு சேகரித்தார்.