ஜெயக்குமார் எதற்கு சந்துல சிந்து பாடணும் - டிடிவி தினகரன்
கொடநாடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
டிடிவி செய்தியாளர்கள் சந்திப்பு
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு அவர் செய்தியர்களை சந்தித்து பேசினார்.
கொடநாடு வழக்கு
2021-ஆம் தேர்தலின் போது, கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் நிச்யமாக தண்டிக்கப்படுவார்கள் என கூறிய தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை என சாடினார். உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் தாங்கள் போராட்டம் நடத்தினோம் என சுட்டிக்காட்டி ஆனால், அதிமுகவின் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ ஆகியோர் தங்களை விமர்சிக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.
சந்துல சிந்து பாடும் ஜெயக்குமார்
இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் எதற்கு சந்துல சிந்து பாடணும் என்றும் கொடநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி தாங்கள் எதுவும் பேசாத நிலையில், ஜெயக்குமார் ஏன் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என சாடினார்.
மேலும், ,சின்னம் இருக்கும் திமிரில் அதிமுகவினர் ஆடுகின்றனர் என கட்டமாக விமர்சனம் செய்த டிடிவி, வரும் நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து நவம்பர் - டிசம்பரில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் அளித்தார்.