அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயக்க - முதல் வாக்குறுதியில் அதிர்ந்த இலங்கை!
கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் மிக எளிமையான முறையில் இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை
இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் 21 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. வாக்குரிமை பெற்ற 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இந்த தேர்தலில் ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரம சிங்க , தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசாநாயக்க, கோத்தபய ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜேபக்ஷே உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. பொதுவாக அதிபர் தேர்தல் தேர்ந்தெடுப்பதற்கு 50 % வாக்குகள் பெற்றிருந்தால் போதும் . ஆனால் முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை.
அதனால் இரண்டாம் முறையாக வாக்கு எண்ணும் பணி நடந்தது. இதில் இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மேலும் 44 % வாக்குகளுடன் சஜித் பிரேமதாசா இரண்டாம் இடம் பிடித்தார்.
பதவியேற்பு
மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க பிடித்தனர். இதற்கிடையே, இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக்க இன்று பதவியேற்றுக்கொண்டார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அனுர குமார திசநாயக்கவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டது. பதவியேற்பின் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுவேன்.
எங்கள் முன்னால் உள்ள சிக்கலான பணியைப் புரிந்துகொண்டு, மக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் வகையில் பணியாற்றுவேன். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம்.” என்று கூறினார்.