கிளாமர்...நெருக்கமான காட்சி - பிரச்சனை இல்லை !! ஆனா சம்பளத்தை வைத்து தெறிக்க விடும் அனுபமா
அனுபமா பரமேஸ்வரன்
மலையாளம் படமான பிரேமம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி, தள்ளிப்போகாதே, சைரன், 108 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகிலும் பிரேமம் பட ரீ மேக்கில் அறிமுகமாகினார் அனுபமா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு சொந்தக்காரர் ஹீரோவாக அறிமுகமான "Rowdy boys" படத்தில் லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அதிரவைக்கும் சம்பளம்...
அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான "தில்லு ஸ்கோயர்" அதனை மிஞ்சியும் கிளாமர் காட்சிகளில் ரசிகர்களை திணறடித்தார். படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து தற்போது "Paradha என்ற தெலுங்கு படத்திலும், லாக்டவுன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். தில்லு ஸ்கோயர் படத்தை தொடர்ந்து அவருக்கு கிளாமர் காட்சிகளை கொண்ட பட வாய்ப்புகள் வந்துள்ளதுதாம்.
ஆனால், அவற்றை மறுக்காமல் ஒப்புக்கொள்கிறாராம் அனுபமா. அப்படி ஒரு பட தயாரிப்பாளர் அவரை அனுகியபோது, அக்காட்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்காத அனுபமா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும், அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை அதிரவைத்துள்ளது.
பின் குறிப்பு : இது வெளியான செய்தியே தவிர அதிகாரபூர்வ தகவல் இல்லை.