கெஞ்சி கேட்டும் விடல.. ரசிகர்களால் நேர்ந்த மோசமான சம்பவம் - அப்செட்டான அனுபமா!
அனுபமா பரமேஸ்வரன்
ப்ரேமம் என்ற மலையாளம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, தள்ளிப்போகாதே, சைரன் 108 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் வெளியான 2 வாரங்களிலேயே 100 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவின் போது, ஒரு மோசமான சம்பவம் நடிகை அனுபமாவிற்கு நடந்துள்ளது.
ரசிகர்களால் அப்செட்
இந்த விழாவில் பேசுவதற்காக நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் முன்னிலையில் அவர் மேடை ஏறினார். அப்போது அனுபமா பேசத்தொடங்கியபோது ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு அவரை பேசவிடாமல் செய்தனர்.

'நான் ஏதும் பேச வேண்டாமா' என அவர் தெலுங்கில் கேட்கவே, வேண்டவே வேண்டாம் என ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மறுத்தனர். கெஞ்சி கேட்பது போல் கேட்டும் ரசிகர்கள் கூச்சலிட்டதால் அப்செட்டான அனுபமா நன்றி மட்டும் தெரிவித்து விட்டு மேடையிலிருந்து இறங்கினார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan