ரூபாய் தாளில் காந்திக்கு பதில் பாலிவுட் நடிகர் - அப்படியும் ஏமாந்த நகை வியாபாரி
500 ரூபாய் தாளில் காந்திக்கு பதிலாக அனுபம் கெர் படம் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க வியாபாரி
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரை சேர்ந்த தங்க வியாபாரி மெகுல் தாக்கரிடம், 2,100 கிராம் தங்கம் வேண்டும் என இரு நபர்கள் அணுகியுள்ளனர்.
RTGS வழியாக முழுத் தொகையையும் உடனடியாக மாற்ற முடியாது எனவும், முதலில் ரூ.1.3 கோடியை ரொக்கமாக வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
கள்ள நோட்டு
இதனையடுத்து, 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 26 கட்டுகளை அளித்து இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை எண்ணும்படி கூறிவிட்டு, மீதமுள்ள ரூ. 30 லட்சத்தை எடுத்து வருவதாக கூறி தங்கத்தை வாங்கி சென்றுள்ளனர்.
இதன் பின் பணத்தை என்ன தொடங்கிய போது நன்றாக உற்று கவனித்ததில் ரூபாய் தாளில் மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் படம் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா’’ என்று அச்சடிக்கப்பட வேண்டிய இடத்தில் "ரிசோல் பேங்க் ஆப் இந்தியா" என்று அச்சிடப்பட்டிருந்தது.
பார்சி வெப் சீரிஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் மெகுல் தாக்கர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகியுள்ள கள்ள நோட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
அண்மையில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘‘பார்சி’’ வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்" என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
लो जी कर लो बात! 😳😳😳
— Anupam Kher (@AnupamPKher) September 29, 2024
पाँच सौ के नोट पर गांधी जी की फ़ोटो की जगह मेरी फ़ोटो???? कुछ भी हो सकता है! 😳😳😳 pic.twitter.com/zZtnzFz34I
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், ‘‘500 ரூபாய்நோட்டில் காந்தி படத்துக்கு பதிலாக என் படம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்" என அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.