போதை தடுப்பு நடவடிக்கை -சென்னையில் 334 பேர் கைது! பின்னணி என்ன?

Tamil nadu Crime Policy Announcement
By Vidhya Senthil Sep 10, 2024 11:26 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

சென்னை மாநகர போலீசார் கடந்த 3 நாட்கள் நடத்திய போதை தடுப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 பேர் கைது செய்துள்ளனர்.

சென்னை

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில்,

arrest

கடந்த 06.09.2024 முதல் 08.09.2024 வரையிலான 3 நாட்கள் "போதை தடுப்பு நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி - தலைமறைவான கடலூர் திமுக எம்பி

கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி - தலைமறைவான கடலூர் திமுக எம்பி

இந்த அதிரடி நடவடிக்கையினால், 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

போதை தடுப்பு நடவடிக்கை -சென்னையில் 334 பேர் கைது! பின்னணி என்ன? | Anti Narcotics Operation 334 People Arrest

வழக்கு  பதிவு

58 சரித்திரப்பதிவேடு போக்கிரிகள் அடங்குவர். இவர்களில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் 6T6OT சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.