சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது பாய்ந்த வழக்கு - என்ன பின்னணி?
சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாய்ந்த வழக்கு
தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் தலைமையில், நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தி பாடல் பாடினார்.அதுமட்டுமின்றி தமது செல்போன் பதிவுகளை போலீசார் ஒட்டுக் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் ஒருமையில் விமர்சித்தார்.
என்ன பின்னணி?
பொது மேடைகளில் பேசக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியும் போலீஸ் அதிகாரிகளை சீமான் விமர்சித்துள்ளார். மேலும் தம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியுமா? எனவும் சவால்விட்டார். தனது உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசுகையிலும் பல கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் தம்மால்தான் தமிழ்நாடு அரசு முருகன் மாநாடு நடத்துகிறது, வணிகர் சங்கத்தினரை தமிழில் பெயர் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளது என சுட்டிக்காட்டி இருந்தார். 2026 சட்டசபை தேர்தலுக்கு 17 மாதங்கள்தான் இருக்கிறது அதற்கு தயாராவோம் என சீமான் பேசியுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.