29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு - என்ன காரணம்?

Death Penalty Nigeria
By Sumathi Nov 05, 2024 07:24 AM GMT
Report

 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிர போராட்டங்கள்

நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி, பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

nigeria

இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

மரண தண்டனை

முன்னதாக போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு - என்ன காரணம்? | Anti Govt Protests In Nigeria Death Sentence

இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2016 முதல் மரணதண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

குழந்தைகள் உரிமைப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று வழக்கறிஞர் அகிந்தயோ பலோகுன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .