ஈபிஎஸ்க்கு நெருக்கம்; அதிமுக EX எம்எல்ஏ வீட்டில் சோதனை - குறிவைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. நகர் சத்யா வீடு உட்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சொத்து மதிப்பு
ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்த்தக்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அதில், 2016 முதல் 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சத்யா தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 2.78 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை
ஆனால் அவரது சொத்து மதிப்பு 13 கோடி. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் இவ்வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை 6.30 மணிமுதல் வடபழனியில் உள்ள சத்யா வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 16 இடங்களிலும் திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒரு இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.