என் கொழுந்தியா ராஜலட்சுமியே அப்படி பண்ணிட்டா - அந்தோணி தாசன் வேதனை!
பாடகர் அந்தோணி தாசன், ராஜலெட்சுமி குறித்து சில தகவல்கள் தெரிவித்துள்ளார்.
அந்தோணி தாசன்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அந்தோணி தாசன். நாட்டுப்புறப் பாடகராக அவதாரம் எடுத்த இவர், பல கச்சேரிகள், தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து, சூது கவ்வும் என்ற படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலை பாடி பிரபலமானார்.

அதன்பின், ண்டியநாடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் பாடினார். அதனையடுத்து, பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
வேதனை
இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஏனென்றால் என்னுடைய மனைவி எழுதிய பாட்டு ஒன்றை என்னுடைய கொழுந்தியாள் ராஜலட்சுமி விஜய் டிவியில் பாடினார்.

அப்போது அது அவருடைய பாடல் போன்று பார்க்கப்பட்டு விட்டது. அந்தபாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. விஜய் டிவிக்கு சென்று கேட்டால் நீங்கள் உங்கள் பாடலை பதிவு செய்திருக்கிறீர்களா என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.
நான் என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் தான் அப்படிச் செய்தேன். நான் இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிலும் அந்த பாடல் குறித்தான விவரங்கள் வெளியிடப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
You May Like This Video
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan