இதெல்லாம் முட்டாள்தனம்; அப்படி பார்த்துவிட்டு விமர்சனமா? ஜோதிகா குறித்து பொங்கிய பிரபலம்!

Jyothika Tamil Cinema Mumbai
By Sumathi Aug 12, 2024 05:30 PM GMT
Report

நடிகை ஜோதிகா ஆடை சர்ச்சை குறித்து பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

jyothika

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். ஜோதிகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் கமிட்டாகியுள்ளார்.

சமீபத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவனுடன் இணைந்து ஜோதிகா நடித்த ஷைத்தான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், ஜோதிகா மும்பையிலேயே சூர்யாவுடன் செட்டில் ஆகிவிட்டார்.

சம்மதிக்கல.. சூர்யா - ஜோதிகா மும்பைக்கு செல்ல காரணமே இதுதான் - உண்மை உடைத்த ஜெயந்தி கண்ணப்பன்!

சம்மதிக்கல.. சூர்யா - ஜோதிகா மும்பைக்கு செல்ல காரணமே இதுதான் - உண்மை உடைத்த ஜெயந்தி கண்ணப்பன்!

பிரபலம் கொந்தளிப்பு

அண்மையில், பிலிம்பேர் விழாவில் பங்கேற்ற ஜோதிகாவின் உடை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் அந்தணன், ஜோதிகா கண்ணியமான வகையிலேயே உடையணிந்திருந்தார்.

இதெல்லாம் முட்டாள்தனம்; அப்படி பார்த்துவிட்டு விமர்சனமா? ஜோதிகா குறித்து பொங்கிய பிரபலம்! | Anthanan On Jyotika Dressing In Mumbai Event

அவரது உடை குறித்து பேசுவது முட்டாள் தனம். அவரது உடையை ஊடுருவி பார்த்துவிட்டு சிலர் விமர்சனம் செய்கின்றனர். பாலிவுட்டில் ஏறக்குறைய அனைவருமே அரைகுறை ஆடையுடனேயே இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

அவர்களுடன் ஒப்பிடும்போது ஜோதிகா 99 சதவிகிதம் சிறப்பாகவே ஆடையணிந்து வந்தார். இந்த விமர்சனம் மிகவும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.