நியாயம் இருந்தா சட்டைய பிடிச்சு கேக்கலாம் - இமான் பத்தி பேசுனா சிவகார்த்திகேயன் மாட்டிப்பாரு!
இமான் - சிவா விவகாரம் குறித்து அந்தணம் கருத்து தெரிவித்துள்ளார்.
இமான் - சிவா விவகாரம்
டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது. இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார்.

இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. பல பிரபலங்கள் இந்த தகவல் குறித்து பேசியிருந்தனர். இதற்கிடையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சிவகார்த்திகேயனுக்கு சாதகமாக பேசியிருந்தார்.
காரணமே இதுதான்..
அதன்பின், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கள்ளக் காதல் மூலமாக இரண்டாம் திருமணம் செய்யவில்லை என இமானும் பேட்டியளித்திருந்தார். தற்போது வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பில் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன்,

"தன் மீது குற்றச்சாட்டு வைத்தும் இதை பற்றி சிவகார்த்திகேயன் பேசாமல் இருக்க காரணம், அவர் இமான் பேச்சை இழுத்தாலே மாட்டிக்கொள்வார் என்பது தான். நியாயம் இருந்தால் தவறாக பேசியவரை சட்டையை பிடித்து கேக்கலாம். ஆனால் தன் பக்கம் நியாயம் இல்லாத காரணத்தால் எதையாவது பேசி முழுக வேண்டியது தான்" எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil