தெருவில் நிர்வாணமாக வலம் வந்த ஏலியன்? பதற்றத்தில் மக்கள்!

United States of America
By Sumathi Mar 13, 2023 06:36 AM GMT
Report

ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் நபர் ஒருவர் சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேற்றுகிரகவாசி

அமெரிக்கா, பாம் பீச் பகுதியில் உள்ள பாலியல் பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை வழியே உடலில் ஆடைகள் எதுமின்றி ஒருவர் நடந்து சென்றார்.

தெருவில் நிர்வாணமாக வலம் வந்த ஏலியன்? பதற்றத்தில் மக்கள்! | Another Planet American Ma Strolled Streets Naked

இதனை கவனித்த அந்த கடையின் ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் அந்த நபர் நடந்து சென்றதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

கைது

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த போலீசார், அந்நபரிடம் விசாரணை நடத்திய போது நான் வேறு பூமியில் இருந்து வந்திருக்கிறேன் என கூறியுள்ளார். அவரிடம் தீவிர விசாரனை நடத்தியதில் அவர் பெயர் ஜேசன் ஸ்மித் (44) என தெரியவந்தது.

அதன்பின், அநாகரீகமாக உடல் பாகங்களை காட்டுதல், ஒழுங்கற்ற நடத்தை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.