நிர்வாண கோலத்தில் 12 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட டெல்லி பெண் - வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை...!
12 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட டெல்லி பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
12 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்
கடந்த ஜனவரி 1ம் தேதி 5 பேரும் முர்தாலில் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுல்தான்புரி பகுதியில் அஞ்சலி ஒன்ற பெண்ணின் ஸ்கூட்டியில் கார் மோதியுள்ளது.
அப்போது இந்த விபத்தில், அஞ்சலியின் பெண்ணின் உடல் கார் சக்கரத்தில் சிக்கி 12 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டது. கார் ஓட்டி வந்த 5 பேர், விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் ஓடிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணை நிர்வாண கோலத்தில் சாலையில் மீட்டெடுத்தனர். நிர்வாண நிலையில், அப்பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அப்பெண் இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தப்பியோடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
தகவல் இந்நிலையில், தற்போது விபத்தில் இறந்த டெல்லி பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், அப்பெண்ணின் தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இவ்வளவு தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால்தான் இந்த பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படாததால், இது பாலியல் வன்கொடுமை இல்லை. விபத்து மற்றும் இழுத்துச் செல்லப்பட்டதால்தான் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களின் வாக்குமூலம் -
கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குத்தில் தெரிவிக்கையில்,
விபத்தின் போது நாங்கள் குடிபோதையில் இருந்தோம். தீபக் கண்ணா தான் வாகனத்தை ஓட்டினார். அமித் கண்ணா, மனோஜ் மிட்டல், கிரிஷன் மற்றும் மிதுன் ஆகியோர் காரில் அமர்ந்து வந்தோம். கன்ஜவாலாவின் ஜோன்டி கிராமத்தில் யு-டர்ன் எடுக்கும் போது காரின் கீழ் வண்டிக்கு அடியில் உடல் சிக்கியிருப்பதை யாரோ ஒருவர் பார்த்ததை அடுத்து கார் நிறுத்தப்பட்டது. அவள் உடல் வெளியேறிய பிறகு, ஆண்கள், அவளுக்கு உதவுவதற்கு பதிலாக, ஓட்டிச் சென்றுவிட்டனர் என்றனர்.
போலீஸ் அதிகாரிகள் திடுக் தகவல்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், முக்கிய சாட்சியை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அஞ்சலி தனது தோழியுடன் இருந்தபோது கார் அவரது ஸ்கூட்டரில் மோதியது. இதனையடுத்து, தோழி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் அஞ்சலியின் கால் காரின் அச்சில் சிக்கிக்கொண்டது.
விபத்துக்கு முந்தைய புதிய சிசிடிவி காட்சிகளில் அஞ்சலி ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பதையும், அவரது நண்பர் வாகனத்தை ஓட்டுவதையும் காட்டுகிறது.
சுல்தான்புரியிலிருந்து கன்ஜவாலா வரை 12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட டெல்லி பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.