2 முறை கவிழ்ந்த கார்.. கார் ரேஸில் விபத்தில் உயிர் தப்பிய அஜித்.. ஷாக்கிங் வீடியோ!
கார் பந்தயத்தின்போது நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதற்கிடையே ஸ்பெயின் நாட்டில் 'Porsche Sprint Challenge'கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டார். அப்போது பந்தயத்தின் 6வது சுற்றில் அஜித் குமார் கார் இரண்டு முறை விபத்துக்குள்ளானது. முதல் சுற்றில் நடந்த விபத்திலிருந்து மீண்டு வந்தார்.
விபத்து
பின்னர் 2 வது சுற்றில் முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென நிற்க, அதன்மீது அஜித்தின் கார் மோதி 3 முறை சுழன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பிறகு காயமின்றி வெளியே வந்து கை அசைத்தார். எனினும் இந்த கார் ரேஸில் களமிறங்கிய நடிகர் அஜித் குமார், 14வது இடத்தை பிடித்ததாகஅவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
Scary moment 🙄🙄😳😳#AjithKumarracing #GoodBadUgly #AjithKumar #ajithkumarracing pic.twitter.com/HEUkK9Vnsp
— cinepics (@cinepiccollx) February 22, 2025
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.