2வது திருமணத்திற்கு ரெடியான மாதம்பட்டி ரங்கராஜ் ?சர்ச்சையை கிளப்பிய பதிவு - வைரல்!
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் 2 வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜன்
சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வீட்டு விசேஷங்களுக்கு உணவுகள் சமைத்து அறுசுவை உணவு வழங்கி பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கநாஜ். இதுதவிர இவருக்கு சொந்தமான ஹோட்டல் அமெரிக்காவிலும் இயங்கி வருகிறது.
மேலும் சினிமா மீதும் ஆர்வம் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜன் கடந்த 2019-ம் ஆண்டு மெகந்தி சர்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதுதவிர விஜய் டிவி ஒளிப்பரப்பு செய்யும் குக் வித் கோமாளி 5 சீசனின் நடுவராக பணியாற்றி வந்தார்.
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2குழந்தைகள் உள்ளன.இந்த நிலையில், ரங்கராஜன் 2 வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜும் அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
2 வது திருமணம்?
இந்த நிலையில், ஜாய் கிரிசல்டா, அதில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.அதுமட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாக குறிப்பிட்டு ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி ஜாய் கிரிஸில்டா போன் வால்பேப்பர் கூட அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோ தான் இருக்கிறது. மேலும் ஜாய் கிரிசல்டாவின் இந்த அடுக்கடுக்கான இன்ஸ்டா பதிவால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.