உலகிலேயே மிக விலையுயர்ந்த பள்ளி இதுதான் - 1 வருட கட்டணம் எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக விலையுயர்ந்த பள்ளி குறித்த தகவல்களை பார்ப்போம்.
விலையுயர்ந்த பள்ளி
உலகின் மிக காஸ்டலியான பள்ளியின் பெயர் இன்ஸ்டிட்யூட் லு ரோசி (Institut Le Rosey). இந்த பள்ளி சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளது. தற்போது, இந்த பள்ளியின் முதல்வராக Christophe Gudin என்பவர் உள்ளார்.
இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிப்பதில் பெரும்பாலான மாணவர்கள் பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஸ்பெயின், எகிப்து, பெல்ஜியம், ஈரான், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அரச குடும்பங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.
ஆண்டு கட்டணம்
இந்த பள்ளிக்கு ஸ்கூல் ஆஃப் கிங்ஸ் அதாவது 'ராஜாக்களின் பள்ளி' என்ற பெயர் உண்டு. இந்த பள்ளியில் பயில ஆண்டு கட்டணமாக ரூ.1 கோடிக்கு மேல் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. இந்த பள்ளி இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஆடம்பர ரிசார்ட் போல் தெரிகிறது.
பள்ளியின் உள்ளே டென்னிஸ் மைதானங்கள், ஷூட்டிங் ரேஞ்சுகள், Equestrian மையங்கள் மற்றும் 4 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கான்செர்ட் ஹால் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் சேருவதற்கான வயது வரம்பு 7 முதல் 18-ஆக உள்ளது.