2வது திருமண நாளில் மூன்றாம் திருமணம் - பெண் சாமியார் அன்னபூரணி சொன்ன காரணம்

Tamil nadu Marriage Chengalpattu
By Karthikraja Oct 30, 2024 01:04 AM GMT
Report

3வது திருமணம் செய்யப்போவதாக பெண் சாமியார் அன்னபூரணி அறிவித்துள்ளார்.

அன்னபூரணி

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மனின் மறு உருவம் என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். 

அன்னபூரணி அரசு அம்மா

தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வரும் அன்னபூரணி, ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். 

கள்ளக்காதலனுடன் இருக்கும் அன்னபூரணி வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

கள்ளக்காதலனுடன் இருக்கும் அன்னபூரணி வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

3வது திருமணம்

அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்து, மாலை அணிவித்து, மலர்தூவி, கற்பூரம் ஏற்றி, தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் ஆசி பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

annapoorani arasu amma

இவருக்கு ஏற்கனவே முதல் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. கணவர் மற்றும் குழந்தையை பிரிந்த இவர் அரசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரசு இறந்து விட்ட நிலையில், தற்போது அரசை திருமணம் செய்த அதே நாளில் வேறொரு நபரை 3வது திருமணம் செய்ய உள்ளார்.

அரசுவின் பரிணாம நிகழ்வு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால், என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாகசெய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அன்னபூரணி அரசு அம்மா

மேலும், என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும்,நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.

அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்" என தெரிவித்துள்ளார்.