அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் புகுந்த இளைஞர் - காதலி முன் ரகளை
இளைஞர் ஒருவர் கோவிலில் அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வெட்ட முயன்றுள்ளார்.
போதை ஆசாமி
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போதை ஆசாமி ஒருவர் அவரது காதலியை அழைத்துக்கொண்டு கத்தியுடன் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்த அந்த ஆசாமி கோயிலுக்குள் பக்தர்களை மிரட்டியபடி ஓடியதால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர்.
தொடர்ந்து, இணை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடி கதவுகளை உடைத்தார். மேலும், இணை ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கத்தியை வைத்துக்கொண்டு ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கோவிலில் அட்டகாசம்
அதனையடுத்து காவல்துறையினர் வருவதை அறிந்த போதை ஆசாமி, காதலியுடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து அலுவலக அறையில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனால், ஊழியர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
அதன்பின் விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த அப்பு என்பது தெரியவந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.