பெண்ணை திருமணம் செய்து தர மறுத்த தாய் - இளைஞர் கொடூர தாக்குதல்..!
திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண்ணின் தாயை வெட்டிய இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்
திறுமணம் செய்து தர மறுப்பு
திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சகிலா பேகம் (34). இவர், மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல துணி கடையில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு முகமது சையது என்பவருடன் திருமணம் நடந்து முடிந்து, 4 குழந்தைகள் உள்ளன.
இதில் சகிலா பேகத்தின் 16 வயதான மூத்த மகள், காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்த மணி என்கிற ஜோசப் ராஜ் (24), அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சகிலா பேகத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் பின்பக்க கதவு வழியாக முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைந்த மணி,
சகிலா பேகத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவருடைய தலை மற்றும் முகத்தை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சகிலா பேகம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்மலை காவல் துறையினர், தப்பி சென்ற வாலிபரை கைது செய்துள்ளனர்