அண்ணாமலை சாட்டையடி போராட்டமே இதுக்குதான் .. ரகசியத்தை போட்டுடைத்த வானதி சீனிவாசன்!

BJP K. Annamalai Vanathi Srinivasan
By Vidhya Senthil Jan 07, 2025 03:29 AM GMT
Report

   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்-வாகவும் ,பாஜக-வின் தேசிய மகளிரணி தலைவராகவும் உள்ள வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்​பட்​டுள்ளார் .

அண்ணாமலை சாட்டையடி போராட்டம் இதுக்குதான்

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் கூறிய அந்த சார் யார்? என்று கண்டுபிடிக்க வேண்டும் . அதுமட்டுமில்லாமல் அந்த சார் யாராக இருந்​தா​லும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?வானதி கேள்வி!

ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?வானதி கேள்வி!

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது தன்னை மிகவும் பாதித்த விஷயம் என்று கூறினார். மேலும் அண்ணாமலை உணர்வு​பூர்வமான ஒரு முடிவை எடுத்​திருக்​கிறார்.

வானதி 

மக்களிடம் கருத்தைச் சேர்ப்​ப​தற்காக போராட்ட வடிவத்தை இந்த முறையில் அமைத்​துள்ளதாக என்று கூறினார்.தொடர்ந்து பேசியவர் ,பிரிவினை​வா​தி​களை​யும், தீவிர​வா​தி​களையும் கண்டு கொள்ளாத தமிழக அரசு, ஜனநாயக வழியில் போராடும் அரசியல் கட்சி​யினரை, மோசமான முறையில் கைது செய்து வருகிறது.

அண்ணாமலை சாட்டையடி போராட்டம் இதுக்குதான்

மதுரையில் நீதிகேட்கும் போராட்டம் நடத்திய பாஜக மகளிரணி​யினரை கைது செய்து ஆடுகள் அடைக்கும் பட்டியில் அடைத்தது ஜனநாயக விரோதம். இதற்குத் தக்க பதிலடியை மக்கள் கொடுப்​பார்கள் என்று கூறினார்.