சிபிஐ விசாரணைக்கு அனுமதி ரத்து, பயந்துவிட்டாரா முதலமைச்சர்? - அண்ணாமலை சீண்டல்!

M K Stalin V. Senthil Balaji K. Annamalai
By Vinothini Jun 15, 2023 04:55 AM GMT
Report

 புலனாய்வு துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ரத்து செய்ததால் முதலமைச்சர் குறித்து அண்ணாமலை ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கைது

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

annamalai-tweets-about-stalin

பின்னர் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதை அடுத்து இவருக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை ட்வீட்

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப் பெற்றுள்ளது. இனி விசாரணை செய்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், “முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக 200 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டனர் எனத் தமிழ்நாடு பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது.

ஆனால் இன்றைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்க்கும் போது சிபிஐ தனது வீட்டிற்கும் விரைவில் விசாரணைக்கு வரும் என்ற அச்சத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது போலத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.