கோவை கார் வெடிப்பு; கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை இன்று சாமி தரிசனம்
கோவையில் கார் வெடித்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
கார் வெடிப்பு
கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் 6 பேரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாமலை சாமி தரிசனம்
இந்த நிலையில், கோவையில் கார் வெடித்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோவில் பகுதியில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.