கோவை கார் வெடிப்பு சம்பவம்; பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் என்பவரின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள அனைத்து ஜமாத் அமைப்புகளுடன் (இஸ்லாமிய மத அமைப்பு) மாவட்ட ஆட்சியர் சமீரான் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமைச்சர் வேண்டுகோள்
அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Electricity Minister V. Senthilbalaji chairs a meeting on the #Coimbatore car blast incident, at the Coimbatore Collectorate on Thursday. Video: @peri_periasamy / @THChennai #CoimbatoreCarBlast pic.twitter.com/buZvHBJyO7
— Periasamy M (@peri_periasamy) October 27, 2022
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக துரிதமாக காவல்துறை செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட இருந்த நிலையில் கோவையை அமைதி நிலைக்கு கொண்டு வந்தது மாவட்ட நிர்வாகம் என பேசினார்.
மேலும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பதற்றத்தை அதிகரிக்காத வகையில் உண்மை நிலவரங்களை செய்தியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் மற்றும் சில பத்திரிக்கைகள் தமிழகம் முழுவதும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் ஊடகவியலாளர்கள் ஒரு கட்சிக்கு துணை போக கூடாது என கேட்டுக்கொண்டார். கோவை மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் போது காரில் குண்டு எடுத்து வந்து வெடிக்கச் செய்யவில்லை. காரில் சிலிண்டர், ஆணிகள், மருந்துகள் தனியாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று அமைச்சர் ஊடகங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.