டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு திடீர் அழைப்பு - முக்கிய பயணம், அடுத்த மூவ் என்ன?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.
அண்ணாமலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனத் தெரிவித்திருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில்,
டெல்லி பயணம்
இதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். அங்கு பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.