வலது கை விரல்ல தான் காயம்; ஆனால் பேண்டேஜ் இடது கையில்.. வைரலாகும் அண்ணாமலை வீடியோ!
அண்ணாமலை குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, வால்பாறை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை தொடங்கினார். சுமார் 2 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது, கூட்ட நெரிசலில் வலது கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்கள் இடையே உரையாற்றுவதற்கு முன்பு வலது கை விரல் பகுதியில் காயத்தைப் பார்த்து கை உதறினார்.
வைரல் வீடியோ
அதனைப் பார்த்த மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேண்டைடு எடுக்குமாறு தொண்டரிடம் கூறினார். அதை வாங்கி வலது கையின் விரல் பகுதியில் போடுவதற்கு பதிலாக இடது கையின் விரல் பகுதியில் போட்டுள்ளார்.
"தொடையில அடிச்சானாம், பல்லு போச்சாம்" என எங்க ஊர்ல ஒரு சொலவடை உண்டு..
— Surya Born To Win (@Surya_BornToWin) September 28, 2023
அதே போல தான் இது?
வலது கையில அடிப்பட்டதுக்கு, எதுக்குடா இடது கையில பேண்டேஜ்? ???
ஐயோ சாமி, பொய், பித்தலாட்டம், அயோக்கியத்தனத்தின் மொத்த உருவம் இந்த அண்ணாமலை! pic.twitter.com/YreO9OZhyI
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.