மத்திய அமைச்சரவைக்கு போகும் அண்ணாமலை - தலைமையும் மாற்றம்!! அதிரடி நகர்வில் பாஜக?

Tamil nadu BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Karthick Jun 06, 2024 06:55 AM GMT
Report

தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

மக்களவை தேர்தல் முடிவுகள் தமிழக பாஜகவினருக்கு ஏமாற்றம் தான் என்றாலும், கணிசமான வாக்குகளை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.தனிக்கட்சியாக பாஜகவின் வாக்கு வங்கி 11.24% சதவீதமாக உயர்ந்துள்ளது.

Tamil Nadu BJP

இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அதே போல, நேற்று செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, 2026-ஆம் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என உறுதியளித்து தொண்டர்களை உற்சாக முட்டியுள்ளார்.

Annamalai Modi

கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ள நிலையில், தோல்விக்கு மத்தியிலும் பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மீது பெரிய அதிருப்திகளை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில்...

இந்த சூழலில் தான், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற செய்திகள் அதிகரித்துள்ளது. ராஜ்ய சபா எம்.பி'யாக்கி அவருக்கு இந்த பதவியை கட்சி தலைமை அளிக்கலாம் என்ற செய்திகள் வேகமெடுத்துள்ளன.

சித்தாந்தத்தில் மாறுபடுகிறோம் ஆனாலும் நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன் - அண்ணாமலை!!

சித்தாந்தத்தில் மாறுபடுகிறோம் ஆனாலும் நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன் - அண்ணாமலை!!

ஏற்கனவே, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்திருந்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2026-ஆம் ஆண்டு தேர்தலை குறிவைக்கும் தமிழக பாஜகவின் இலக்கில் இருந்து தற்போதைக்கு அண்ணாமலையை திசைதிருப்பவும் பாஜக தலைமை விரும்பாது என்றும் தகவல் வெளிவருகின்றன.

Annamalai Modi

மத்திய அமைச்சரவை இன்னும் ஓரிரு நாளில் அமைக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், அப்போது இதற்கான பதில்கள் கிடைத்து விடும். நேற்று, முதலே தமிழக பாஜக தலைமை பதவி மாற்றப்படும் என்ற தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இச்செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.