திடீரென டெல்லி விரையும் அண்ணாமலை; கூட்டணியில் சிக்கல் - முக்கிய முடிவு!
அண்ணாமலை டெல்லி சென்று முக்கிய ஆலோசணை நடத்தவுள்ளார்.
அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
அதில், பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி பயணம்
அதனைத் தொடர்ந்து, தொகுதி பங்கீடு , கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 16இல் அண்ணாமலை டெல்லி செல்கிறார். நட்டா மற்றும் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்.16,17இல் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக பாஜகவை இணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும், பாஜக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் தேமுதிக - பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.