ஆளுநர் தமிழ்நாடு வந்து சில மணி நேரம்தான்.. திடீரென டெல்லி விரைந்த அண்ணாமலை!
அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி பயணம்
ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில்தான் டெல்லி சென்று இருந்தார். அங்கே பல்வேறு சந்திப்புகளை நடத்தினார். அதனை முடித்துக்கொண்டு இன்று அதிகாலைதான் ஆளுநர் ரவி தமிழ்நாடு திரும்பினார்.

அதனையடுத்து, தற்போது அண்ணாமலை டெல்லிக்கு இன்று காலை 7 மணிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் எழுதிய கடிதத்தை அடுத்து சட்ட சர்ச்சைகள் பல உருவெடுத்தன.
வெடிக்கும் விவகராம்
மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் சந்திப்பில் அரசியலமைப்பின் 355-வது சட்டப்பிரிவு அலசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனவரி 11ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது.
மொத்தம் 168 நாட்கள் இந்த பயணம் நடைபெறும். இதற்காக பாஜக சார்பாக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2024 தேர்தலை மனதில் வைத்து இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
யாழில் அர்ச்சுனா எம்.பியின் காணியால் மக்களுக்கு அவஸ்தை! நடவடிக்கைக்கு தயாராகும் பிரதேச சபை IBC Tamil