ஓடி ஒழியாமல் பிரதமரை பார்த்து ஸ்டாலின் அரசியல் கத்துக்கணும் - அண்ணாமலை பேச்சு!
பயந்து ஓடாமல் பிரதமரை பார்த்து தமிழக முதல்வர் அரசியல் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
நிகழ்ச்சி
சென்னை சைதாப்பேட்டையில் பாஜக சாா்பில் நேற்று இரவு பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அண்ணாமாலை முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
இதனை தொடர்ந்து, அண்ணாமலை பேசுகையில், "இன்று 4 எம்.எல்.ஏக்கள்தான். அவை நாளை 150 ஆக அதிகரிக்கும். உழைப்புதான் எங்கள் நம்பிக்கை. பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும்.
தி.மு.க.யாரையும் கண்டு பயப்படாது என்று கூறுகின்றனர். ஆனால் எமர்ஜென்சியின் போது ஓடி ஓளிந்தனர். தவறு செய்யும்போது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். சமூக வலைதளத்தில் உண்மையை பதிவிட்ட எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள்" என்று கூறியுள்ளார்.