அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் - அண்ணாமலை ஆவேசம்!

V. Senthil Balaji K. Annamalai
By Vinothini May 19, 2023 07:03 PM GMT
Report

கோவையில் நடைபெற்ற சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

சிறப்பு கூட்டம்

கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

anamalai-speaks-about-senthil-balaji

இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்,

இதில் அவர் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக தேர்தல் பணி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார், மேலும் அவர் 2024 என்பது பாஜகவிற்கு பலபரீட்சை என்றார்.

அண்ணாமலை

இதனை தொடர்ந்து, அவர் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டதாகவும் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறினார்.

anamalai-speaks-about-senthil-balaji

மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் முறையிடப் போவதாகவும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.