2024-ல் தி.மு.க எந்த தொகுதியிலும் வெற்றிபெறாது, அதிருப்தியில் மக்கள் - உறுதியாக சொன்ன அண்ணாமலை!
அண்ணாமலை இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் திமுக குறித்து பேசியுள்ளார்.
அண்ணாமலை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இங்கிலாந்தில் உள்ள தமிழர்களை சந்திக்க உள்ளேன்.
அதற்காக 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 மாத காலமாக ஒன்றிணைவோம் என்று பேசி வருகிறார். முதல்வருக்கு தெரியும் அவருடைய ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, மக்கள் திமுக ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
பேட்டி
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "2024ல் திமுக கூட்டணி எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதனை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முதல்வர் வைத்துக்கொண்டு இருக்கிறார்.
அதற்கு சாட்சியாக திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியே சாட்சி. முதலில் குடியரசுத் தலைவர் வருவதாக இருந்தது. பின்னர் அவர் வரவில்லை. அதன் பிறகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. அவரும் வரவில்லை. இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை அழைத்து கலைஞர் கோட்டத்தை திறந்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.