பிராமணர்களை அண்ணாமலை ஒழிக்க பார்க்கிறார்; சீக்கிரம் மாற்றப்படுவார் - எஸ்.வி.சேகர் காட்டம்!
பிராமணர்களை அண்ணாமலை ஒழிக்க பார்ப்பதாக எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் செய்தியாளர்களச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''பாஜகவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு மோடியை மட்டும்தான் தெரியும். பாஜகவிற்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். பதில் சொல்வதற்குதான் ஒருத்தர் இருக்கிறாரே.
அண்ணாமலை அவரை கேளுங்கள். விரைவில் தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டால் தமிழக பாஜக வளர்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவர் செய்துள்ள விமர்சனம் தவறானது. அரசியலே தெரியாது அவருக்கு. அதனால் வாய்க்கு வந்ததை பேசுகிறார்.
காட்டம்
அவர் கட்சி ஆபீஸ ஒரு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி நடத்துகிறார். அங்கு வருபவர்கள் எல்லாம் ஏதோ கைதி மாதிரியும் அவர் இன்னமும் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிற மாதிரியும் நடந்து கொள்கிறார். பார்ப்பவர்கள் எல்லாம் இவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என நினைக்கிறார். விரைவில் அவர் மாற்றப்படுவார். நண்டு சிண்டு மாதிரி அல்லக்கைகளை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பது அண்ணாமலைக்கு பொருந்தும். அண்ணாமலை பிராமணர்களை ஒழித்துக் கட்டுவேன் என்ற ஒரு தீர்மானத்தில் நடந்து கொண்டிருக்கிறார். அதனுடைய பலன் 2024-ல் தெரியும்.
ஆனால் அதை எதிர்கொள்ள அண்ணாமலை கட்சியில் இருப்பாரா என்று தெரியவில்லை. அதற்குள் மத்திய பிரதேசம், அசாம், மேகலாந்துக்கு பார்வையாளராக அனுப்பிவிடுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.