நானெல்லாம் 2000 ரூபாய் நோட்ட பாத்து ரொம்ப நாள் ஆகுது - அண்ணாமலை பேட்டி!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் உத்தரவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
செல்லாத நோட்டுகள்
தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தனர், இப்போது அதனை ஒழிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அண்ணாமலை
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

அதில் அவர், "என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. பெரும்பாலான மக்களிடமும் தற்போது ரூ.2000 நோட்டுகள் இல்லை.
நானும் 2000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. 2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை.
இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல முடிவு இது.
கடந்த மூன்றரை வருடங்களாக 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan