நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்யும் விஜய் - விளாசிய அண்ணாமலை
நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் விஜய் என அண்ணாமலை விளாசியுள்ளார்.
அண்ணாமலை
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், பள்ளிக்குழந்தைகள் மாதிரி அரசியல் செய்கிறது தவெக. சினிமா சூட்டிங்கில் பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் விஜய்.
விஜய் திமுக-வின் பி டீம்
நான் களத்தில் இறங்கி போராட்டம் நடத்துகிறேன் களத்தில் நின்று பேசுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்ன Work from home அரசியல் செய்கிறாரா? விஜய்-க்கு 50 வயதில்தான் அரசியலில் வரவேண்டும் என்று தோன்றியதா. 30 வயதில் எங்கே சென்றார்.
நாடகம் பன்னுவது விஜய். விஜய் திமுக-வின் பி டீம். சூட்டிங்கில் உட்கார்ந்து அறிக்கை அனுப்பும் விஜய்-க்கு மக்களின் கஷ்டத்தை பற்றி என்ன தெரியும்.
சினிமாவில் புகைப்பிடிப்பது, மது குடிப்பது என நடிக்கும் விஜய்-க்கு டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது. ஒருநாள் குல்லா போட்டுக் கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றால் போதுமா? கடுமையாக சாடியுள்ளார்.

யாழில் காணாமற்போன லலித்-குகன்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு : சிக்குவாரா கோட்டாபய...! IBC Tamil

Doctor Prescription இல்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்து கொள்கிறீர்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்காக தான்.. Manithan
