ஷூட்டிங்கில் எழுதி கொடுத்ததை விஜய் படிக்குறாரு; தொகுதி எண்ணிக்கை கூட தெரியல - அண்ணாமலை சாடல்
விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு
தமிழக அரசு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தமிழகத்திற்குப் பெரிய சிக்கலாக இருக்கும் என்று பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எதற்காக அனைத்து கட்சி கூட்டம். இது தேவைதானா.. நாங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என நாடாளுமன்றத்தில் சொல்லும்போது அது குறித்து கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்தோம். அதேபோல தொகுதி மறுவரையறை வரும் போது அது குறித்து விளக்குவோம்.
அண்ணாமலை விமர்சனம்
நீங்களாகவே கற்பனை குதிரைகளை ஓடவிட்டு. 38 இடங்களில் இருந்து 31 தொகுதிகளாகக் குறையும் என்கிறீர்கள். 848 தொகுதிகளாகும் போது தமிழகத்திற்கு 12 தொகுதிகள் குறையும் என்றும் நீங்களே சொல்கிறார்கள். இது நாங்கள் சொன்னோமா.. நாங்கள் Pro rata அடிப்படையில் இருக்கும் என்று மட்டுமே சொல்கிறோம் என்றார்.
பின் விஜய் குறித்த கேள்விக்கு, ஷூட்டிங் ஸ்பாட்ல யாரோ எழுதிக்கொடுத்ததை விஜய் படிச்சிட்டு இருக்காரு.. த.வெ.க சார்பாக வந்தவருக்கு நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகள் இருக்கிறது என்பதே தெரியவில்லை.
அவர் ஏதோ நம்பரைச் சொல்கிறார். செய்தியாளர்கள் தவறை சுட்டிக்காட்டிய பிறகே தவெக சார்பாக வந்தவர் மாற்றிப் படிக்கிறார் எனக் கடுமையாக சாடியுள்ளார்.