மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமதிப்பதா? உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

Udhayanidhi Stalin K. Annamalai Madurai Jallikattu
By Karthikraja Jan 16, 2025 01:39 PM GMT
Report

 தனது மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அவமதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இன்று மதுரையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

inbanidhi in jallikattu இன்பநிதி ஜல்லிக்கட்டு

உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் போட்டியை காண வந்திருந்தார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

களைகட்டும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசுப்பொருட்கள் என்னென்ன?

களைகட்டும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசுப்பொருட்கள் என்னென்ன?

அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்நிலையில் இன்பநிதியின் நண்பர்களை அமர வைப்பதற்காக மாவட்ட ஆட்சியரை மேடையில் இருந்து அகற்றியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 

annamalai about inbanidhi

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதிகார துஷ்பிரயோகம்

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? 

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.