விஜய்யை தொடர்ந்து திருமாவளவனுக்கு CBSE பள்ளியில் தொடர்பு? - அண்ணாமலை குற்றச்சாட்டு

Thol. Thirumavalavan Tamil nadu K. Annamalai
By Karthikraja Feb 20, 2025 06:04 AM GMT
Report

திமுகவினரை போல் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மும்மொழி கொள்கை

புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். 

ஒன்றிய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான்

பாஜகவை தவிர்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகள், "தமிழ்நாட்டிற்கு இரு மொழிக்கொள்கை போதும். மும்மொழி கொள்கை தேவை இல்லை, மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயல்கிறது" என கருத்து தெரிவித்துள்ளன. 

விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் ஹிந்தி உள்ளது - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் ஹிந்தி உள்ளது - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

திருமாவளவனும் இரட்டை வேடம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி சொந்தமாக விஜய் வித்யாஷ்ரம் என்ற பள்ளியை நடத்துகிறார். அந்த பள்ளியில் ஹிந்தி உட்பட மூன்று மொழிகள் கற்று தரப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் ஏன் 3 மொழிகள் பயிலக்கூடாது" என குற்றஞ்சாட்டினார். 

annamalai bjp

இந்நிலையில் திருமாவளவனும் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றின் நிர்வாக குழு தலைவராக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.