40 வருடங்களாக என்ன செஞ்சீங்க? கச்சத்தீவை கையில் எடுக்கும் திமுக - அண்ணாமலை கொதிப்பு

M K Stalin DMK K. Annamalai
By Sumathi Apr 02, 2025 08:30 AM GMT
Report

 திமுக கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில்,

annamalai - mk stalin

கச்சத்தீவை மீட்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என

தமிழ்நாடு இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?

வசனம் பேசினால் மட்டும் போதாது; விளம்பர ஷூட்டிங் அல்ல - கொந்தளித்த இபிஎஸ்

வசனம் பேசினால் மட்டும் போதாது; விளம்பர ஷூட்டிங் அல்ல - கொந்தளித்த இபிஎஸ்

அண்ணாமலை கேள்வி

இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக.

40 வருடங்களாக என்ன செஞ்சீங்க? கச்சத்தீவை கையில் எடுக்கும் திமுக - அண்ணாமலை கொதிப்பு | Annamalai Slams Stalin For Katchatheevu Resolution

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள்.

மீனவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, 50 ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.