தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றம்? தமிழிசை தகவல்
தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் மாற்றம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார்.
புதிய தலைவர்
சென்னை மடிப்பாக்கத்தில் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"எங்கள் கட்சிக்கு என்று தனி நடைமுறை உள்ளது. யாருக்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்ய போகிறோம். அண்ணாமலை கட்சிக்காக உழைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலமாக புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழிசை தகவல்
அதனால் தமிழகத்துக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே தலைவராக இருந்தவர் மீண்டும் தலைவராகலாம்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
நான் என் கட்சியை வளர்ப்பதற்காக தான் உழைக்கிறேன். நான் தொண்டனாக வேலை செய்யவும் தயார். என்னால் யாருக்கும் தொந்தரவு வராது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.