சாப்பிடுட்டு இப்போ காரம்'னு சொன்ன..! அண்ணாமலை யார சொல்லறாரு'ணு தெரியுதா..?
கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக மீது செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுக விமர்சனத்தை வைத்துள்ளார்.
அதிமுக - பாஜக முறிவு
கூட்டணியில் இருந்த போதும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ந்து முரண்பாடான போக்கு நீடித்து வந்தது.
அதனை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அதிமுக, அதற்கு காரணமாக அண்ணாமலையை மறைமுகமாகவும் குறிப்பிட்டிருந்தது. தமிழக பாஜகவின் தென் சென்னை செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அண்ணாமலை உரை
இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசும் போது, வீடு நாம் கட்டியுள்ளோம், NDA கூட்டணி நமது வீடு என்று கூறி, சிலர் உணவருந்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவார்கள் என்றும் வெளியே சென்றுவிட்டு வீட்டில் நாங்கள் இல்லை என்பார்கள் அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் தான் என்றார்.
வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது என்ற அண்ணாமலை, மோடி அனைவரையும் வரவேற்பார் என்று தெரிவித்து, NDA கூட்டணி எனும் வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்தவர்கள் தற்போது வெளியே சென்றுவிட்டு உணவு காரம் என்கின்றனர், ஆனால் அதே காரமான உணவைத்தான் கடந்த 9 ஆண்டுகளாக உண்டனர் என்பதை சொல்லிக் கொள்கிறேன் எனக் கூறினார்.