அங்கு துரைமுருகன் கைநீட்டி பணம் வாங்கிட்டாரோ என சந்தேகமா இருக்கு - அண்ணாமலை!
கர்நாடகா அரசிடம் துரைமுருகன் கைநீட்டி பணம் வாங்கிட்டாரோ என சந்தேகமா இருக்கு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
ஈரோடு அரச்சலூர் ஓடாதநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“காவிரி விவகாரத்தில் திமுக அமைதி காப்பது சந்தேகமாக உள்ளது. மழை பெய்து தண்ணீர் வந்ததால் காவிரி பிரச்னை காணாமல் போய்விட்டது. காவிரி பிரச்சனை இனி அடுத்த வருடம்தான் வரும். மிகப்பெரிய வியாதியே மறதிதான்...
துரைமுருகன்
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என துரைமுருகன் கூறுகிறார். கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காத துரைமுருகன், அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரா என சந்தேகம் உள்ளது.
தமிழ்நாட்டில் கொலைகள் அதிகமாக நடப்பதற்கு காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது தான் காரணம்.. கொலைக்கு மோட்டீவ் இருக்கும்தான். ஆனால் திமுக ஆட்சியில் ஏன் கொலைகள் அதிகரித்துள்ளன? காவல்துறை மீதான அச்சம் போய்விட்டதால் தான் நாள்தோறும் சுமார் 15 கொலைகள் நடக்கின்றன.
காவல்துறையினர் காவல்நிலையத்தில் வேலை செய்வதில்லை. அதனால் கொலைகள் அதிகரித்துள்ளன. கொலைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினால், அதற்கு திமுக அமைச்சர்கள் கொடுக்கும் விளக்கத்தை பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.